ஜுலை 3ல் டிரம்ப், ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி..!

ஜுலை 3ல் டிரம்ப், ஆதரவாளர்களுடன் மாபெரும் பேரணி..!

அமெரிக்காவில் வரும் ஜூலை 3-ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ‘சேவ் அமெரிக்கா’ (அமெரிக்காவை காக்கவேண்டும்) என்கிற தலைப்பில் பிரமாண்ட பேரணி ஒன்றை தனது ஆதரவாளர்களுடன் நடத்தத் திட்டமிட்டுள்ளார். புளோரிடா மாகாணத்தின் சரசோட்டா நகரில் வரும் ஜூலை 3 (சனிக்கிழமை) டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்களுக்கு அவரது கட்சியினர் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மாபெரும் வெற்றிபெற்று புதிய அதிபராகப் பதவியேற்றார். தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடினார். டொனால்ட்…

Read More

‛டெல்டா பிளஸ்’ கர்நாடகாவுக்குள் நுழைவு; பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு

‛டெல்டா பிளஸ்’ கர்நாடகாவுக்குள் நுழைவு; பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு

பெங்களூரு-கொரோனா மூன்றாம் அலை பீதிக்கிடையில், ‘டெல்டா பிளஸ்’ எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளதால், மாநிலம் முழுதும், அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆங்காங்கே பரிசோதனை நடத்தும்படி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா முதலாம் அலையை விட, இரண்டாம் அலையால் கர்நாடக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.விரைவில், மூன்றாம் அலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்றும் மருத்துவ நிபணர்கள் எச்சரித்துள்ளனர்.நடவடிக்கைஇதற்கிடையில், டெல்டா பிளஸ் எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் தலா, ஒருவருக்கு இந்த வகை தொற்று ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உட்பட…

Read More

மோசடியான தள்ளுபடி விற்பனை : ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்திய அரசு நடவடிக்கை !!

மோசடியான தள்ளுபடி விற்பனை : ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்திய அரசு நடவடிக்கை !!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முக்கியமான திருத்தங்களை சேர்ப்பது தொடர்பாக ஜூலை 6-ந் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் மோசடியான தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிப்பது, தலைமை குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனால், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ‘பிளாஷ் சேல்’ என்ற பெயரில் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக கூடுதல் செயலாளர் நித்தி காரே கூறியதாவது:- அதிரடி தள்ளுபடி விற்பனையை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய போட்டி இருந்தால்தான், பொதுமக்களுக்கு…

Read More

ரஷ்யாவில் புதிதாக 16,715 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 546 பேர் பலி

ரஷ்யாவில் புதிதாக 16,715 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 546 பேர் பலி

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 17.96 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38.91 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 53,50,919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 546 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து…

Read More

திருமங்கை ஆழ்வாரின் திருவேடுபறி திருவிழா !!

திருமங்கை ஆழ்வாரின் திருவேடுபறி திருவிழா !!

திருமங்கை ராஜா பகவான் ரங்கநாதரையும் & மாதாவையும் வேதராஜபுரத்தில் கொள்ளையடிக்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டு திருமங்கை அழ்வாராகி பக்தி இயக்கத்தை பரப்பினார் !! நள்ளிரவுக்குப் பிறகு நடக்கும் இந்த அற்புதமான திருவேடுபறி திருவிழாவை பார்த்து, பக்தி பரவசமடைந்து… அனைவருடனும் பகிரவும் தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ரங்கா ரங்கா !!

Read More

100 கோடி தடுப்பூசி உண்மையாக சீனா செலுத்தியதா ? பயனடைந்தோர் எண்ணிக்கையில் பெரும் மர்மம் !!

100 கோடி தடுப்பூசி உண்மையாக சீனா செலுத்தியதா ?  பயனடைந்தோர் எண்ணிக்கையில் பெரும் மர்மம் !!

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா இந்த வைரசைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்துள்ளது. சீன சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் செங்க் இக்சின் தெரிவித்து உள்ளதாவது: சீனாவில் தற்போது கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கவில்லை. அந்த வகையில் சீனாவில் நான்கு தடுப்பூசிகளுக்கு இதுவரை அனுமதி…

Read More

மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சையினால் 729 பேர் உயிரிழப்பு !!

மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சையினால் 729 பேர் உயிரிழப்பு !!

மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. கோவிட் முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை, 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. மஹாராஷ்டிரா சுகாதாரத் துறை இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மஹாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி காலை 11:00 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும்,…

Read More

‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

‘உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை’ என, ‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு, பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது. சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதை ஏற்க, ‘டுவிட்டர்’ நிறுவனம் மறுத்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கியது.கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘டூல்கிட்’ வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக டில்லி மற்றும் குர்கானில் உள்ள டுவிட்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற போலீசார், ‘நோட்டீஸ்’ அளித்தனர். இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதளம் தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் குடிமக்கள்…

Read More

இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் COVID-19ல் பாதிக்கப்பட்டு 91 வயதில் இறந்தார்

இந்திய ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் COVID-19ல் பாதிக்கப்பட்டு 91 வயதில் இறந்தார்

அவர் மே 24 அன்று மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டார். 91 வயதான அவர் மே 19 அன்று COVID-19 க்கு நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்டார், ஆனால் அவர் அறிகுறியில்லாமல் இருப்பதை வெளிப்படுத்திய பின்னர் அவரது சண்டிகர் இல்லத்தில் வீட்டில் தனிமையில் இருந்தார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர் “கோவிட் நிமோனியா” காரணமாக மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் பிந்தைய சிக்கல்களால் அவரது மனைவி நிர்மலும் இறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது மரணம் ஏற்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள…

Read More

பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக – பா.ஜ.,வின் இப்ராகிம்

பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக –  பா.ஜ.,வின் இப்ராகிம்

”சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது,” என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம் குற்றம் சாட்டினார். மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை போலீசை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது. கடந்த காலத்தில், முஸ்லிம்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததையும், தேசத்திற்கு எதிரான செயல்களை சில அமைப்புகளும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கும்…

Read More
1 2 3 4 5