ஊர்ந்து போனவர் ஊர் ஊராக செல்கிறார்: முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்
ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருப்பதாக முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நிற்பதை பார்த்தால் தற்போதைய ஆட்சியின் கொடுமையை விட இது ஒன்றும் பெரிது இல்லை என்பது போல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கே வந்திருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வரும். பாம்பு கடியில் உள்ள விஷத்தை விட துரோகத்தின் விஷம்…
Read More