கிறிஸ்டின் மிஸ்ஸானரி காருண்யா’வின் சட்டவிரோத கட்டுமானங்கள்! அதிர்ச்சி தகவல் அம்பலம்
கோவை அருகே காருண்யாநகரில், காளான் போல் பெருகிவரும் தேவாலய கட்டுமானங்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கோவை அருகே காருண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பல பிரார்த்தனை அரங்குகள் மற்றும் தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அந்தந்த ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே காளான் போல் பெருகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை மனுவை தாக்கல் செய்த வக்கீல் ரங்கராஜு கூறியதாவது:கோவை மாவட்டம், மத்வராயபுரம், பூலுவபட்டி, இக்கரை போளுவாம்பட்டி, ஆலாந்துறை ஊராட்சிகள் மற்றும் அவற்றை சுற்றிலும், கடந்த 10 ஆண்டுகளில், பல புதிய தேவாலயங்கள், பிரார்த்தனை மண்டபங்கள்…
Read More