கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!

கொழும்பு, கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்துள்ள கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை திடீரென அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்காக களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ்…

Read More

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது. இது இலங்கையை கடக்கும்வரை புயலாகவே காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் கூறுகிறது. வங்காள விரிகுடாவில் உருவாகும் பெருமளவிலான புயல்கள், இலங்கைக்கு அருகே மையம் கொண்டவாறு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல், இலங்கைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகே ஊடுருவி தமிழகம் நோக்கி நகருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இலங்கைக்குள் புயல் ஒன்று ஊடுருவிச் சென்றது. தற்போதைய புரெவி புயலும் அதை ஒத்ததாகவே…

Read More