ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பதவியேற்றவுடன் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்கள் இப்போதே ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஜனநாயகக் கட்சி எப்போதும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின்…

Read More

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில், பிரார்த்தனை நிகழ்ச்சியை, இந்திய தொழிலதிபர் ஹிந்துஜா சமீபத்தில் நடத்தினார்.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ‘ஆன்லைன்’ வாயிலாக விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியது: இங்கு வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கொரோனா நெருக்கடியில் சிக்கிய பலரையும் காப்பாற்றும் வகையிலான உதவிகளை, இரக்கம், சமூக உணர்வு மற்றும் உதவும் மனப்பான்மையுடன் மேற்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். தீபாவளி, இருளை வெல்லும் பண்டிகை. இது தீமைக்கு எதிரானது என்பதால், வைரஸ் பாதிப்பை, நாம் ஒன்றாக கடந்து செல்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Read More