டில்லியில் மீண்டும் லாக் டௌனா ? இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ?  இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,’ என்றார்.

Read More

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் ஜோ பைடன் 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் ஆட்சி மாற்ற குழு டொனால்ட் டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி வரும் போதும் இதனால் டிரம்ப் இன்னமும் குடியரசு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார் இது முன்னதாக சமூகவலைதளங்களில் வேடிக்கைக் உள்ளானது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றுள்ளனர்….

Read More