இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி போலீஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார். ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியிருந்தார். சுமார் 6 நாட்கள் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீனை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…

Read More

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இப்படத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை எதிர்கொண்டு வென்றிருக்கிறேன். இந்தப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை படமாக்க சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போது அதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தடைகளை கடந்து இந்த…

Read More