பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது

பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகர்ந்துள்ளார். திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். மும்பை தாஜ் ஹோட்டலில்…

Read More

இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து “பிரான்ஸுக்கு ” ஆதரவாக என்றும் நிற்போம் – இந்திய பிரதமர் மோடி

இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து “பிரான்ஸுக்கு ”  ஆதரவாக என்றும் நிற்போம் – இந்திய பிரதமர் மோடி

பிரான்ஸில் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மிகவும் கொடூரமான முறையில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் பிடித்தபோது, அல்லாஹு அக்பர் என தொடர்ச்சியாக அவர் முழக்கமிட்டதாக நீஸ் நகர மேயர் தெரிவித்தார். தேவாலயத்துக்குள் ஒரு வயோதிக பெண், ஒரு ஆண் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டனர். பல முறை கத்திக்குத்து காயங்களுடன் உயிர் தப்பிய பெண் அருகே உள்ள…

Read More

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் !!

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் !!

ரங்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹெச். சுந்தர் தயாரிக்க, எஸ் . அருண் குமாரின் கதை அமைப்பில்,  ஆர் சபரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஸ்ரீரங்கா பூஜையுடன் துவங்கப்பட்டது. ஸ்ரீ ரங்கத்தில் கோவில் கொண்டு இருக்கும் அரங்கனின் வரலாறு , மற்றும் மாபெரும் வைணவப் பெரியார்களைப் பற்றி பேச இருக்கும் இந்தத் தொடர், விரைவில் பிரபல தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது. “திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா தவம் புரியவே, தவத்தில் மகிழ்ந்து திருமால் பிரணவாகார விமானத்தை பரிசளித்தார்! பிரம்மாவின் வம்சத்தவரால் சத்ய லோகத்தில் பூஜிக்கப்பட்டு இஷ்வாகுவின் தவத்தினால் அயோத்தி வந்து அவரின் வழிதோன்றல்களான, தசரதருக்கு பின் ஸ்ரீராமர் வரை பூஜிக்கப்பட்டு, இலங்கையை…

Read More

பிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பேர் குத்தி கொலை

பிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பேர் குத்தி கொலை

பிரான்சில், நைஸ் நகரில் உள்ளது நாட்டர்டேம் தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பயங்கரவாதி ஒருவர், மூன்று பேரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பயங்கரவாதியை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தனர். அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்கிய பயங்கரவாதி, மத முழக்கங்கங்களை எழுப்பியதாக, நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளதால். இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரான்சில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ளதாவது: பிரான்சில்…

Read More

பா.ஜ.,வை ஆதரிப்போம்-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

பா.ஜ.,வை ஆதரிப்போம்-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போடுவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உ.பி.,யில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அங்கு எதிரெதிர் பக்கத்தில் இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. இதனால், கூட்டணி முறிந்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதி தலைவர் அகிலேசை சந்தித்து பேசினர். அவர்கள் விரைவில், சமாஜ்வாதியில் சேரப்போவதாக தெரிவித்ததுடன், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது எனவும் கூறியுள்ளனர். இது…

Read More

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா ? சட்டத்தின் பிடி இருக்கிறது !!

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா ? சட்டத்தின் பிடி இருக்கிறது !!

அமெரிக்க அதிபர் உட்பட அந்நாட்டின் எம்.பி.க்கள் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும் நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, சமூக ஊடக பயனர்களின் பதிவுகள் தொடர்பாக அந்த நிறுவனங்களை விசாரிக்கும் வழக்கம் இல்லாதபோதும், இதை இப்படியே விட்டால், அது தவறான பழக்கமாகி விடலாம் என சில எம்.பி.க்கள் கூறியதையடுத்து, இந்த விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த விசாரணைக்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்ஸே, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக அழைக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் தகவல் தணிக்கை செய்யப்படுவது குறித்து கவலைப்படும் அதே சமயம், தவறான தகவல்கள் அதன்…

Read More

காஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி !!

காஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி !!

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு, கடந்தாண்டு ரத்து செய்தது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நிலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலையில், அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று பி.பி.ஐ.ஏ., எனப்படும் தொழிலதிபர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய நில சட்ட திருத்தம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. நில திருத்த சட்டத்தால் இரு யூனியன் பிரதேசங்களிலும், பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு…

Read More

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஏமி கோனி பாரெட் தேர்வு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஏமி கோனி பாரெட் தேர்வு

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஏமி கோனி பாரெட், 48, பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், ஒன்பது நீதிபதி பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்பவர், இறக்கும் வரை, அந்தப் பதவியில் தொடர்வது வழக்கம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவரை, அதிபர் நியமிக்கலாம். அந்த நியமனத்துக்கு, அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரூத் பேடா கின்ஸ்பாக், 87, உடல்நலக் குறைவு காரணமாக, சமீபத்தில் காலமானார். இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த, ஆமி கோனி பாரெட்டை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, அதிபர் டிரம்ப் நியமித்தார்.இந்த நியமனத்துக்கு, செனட் நிலைக்குழு ஒப்புதல் வழங்கியது….

Read More

‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

ஹரியானாவில், 21 வயது கல்லுாரி மாணவி, சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது, ‘லவ் ஜிகாத்’ என, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில், 21 வயது கல்லுாரி மாணவி, தேர்வு எழுதிவிட்டு, கல்லுாரியை விட்டு வெளியே வந்தார்.அப்போது, அங்கு வந்த இருவர், மாணவியை தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். மாணவி மறுத்தார். இதையடுத்து, அவரை துப்பாக்கியால் சுட்டு, இருவரும் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும்…

Read More

கொரோனா தொற்றால்அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்

கொரோனா தொற்றால்அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13ம்தேதி, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விக்கிரவாண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், உயர் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. நுரையீரல் பாதிப்பால், மூச்சுத் திணறல் இருந்ததால், வென்டிலேட்டர் வாயிலாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராத நிலையில், தற்போது அதற்கு அடுத்தபடியாக, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து இன்று மருத்துவமனை வட்டாரங்கள்…

Read More
1 2 3 5