சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மருந்து பொருட்கள், பூச்சி மருந்து தயாரிப்பு மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களுக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சீனாவிலிருந்து 75 வகையான ரசாயனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது எல்லைப் பிரச்னை காரணமாக சீனாவுடன் மோதல் போக்கு நிலவுவதால் ரசாயன தேவைகளுக்காக அந்நாட்டை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டில் ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் இந்திய அரசு…

Read More

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு !!

பிரிட்டனில் கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார அமைச்சர் மாட் ஹானோக், ‛ பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரண்டாவது தடவையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்த திட்டம் உள்ளது. வடகிழக்கு பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் இரு மடங்காகி வருகிறது. ஊரடங்கு என்பது கடைசி முயற்சியாக இருக்கும். மண்டலவாரியாகவும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மக்களின் உயிரை காப்பாற்ற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரிட்டனில் இதுவரை மொத்தம் 3,85,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,322…

Read More