முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

டெல்லியில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் கே. அண்ணாமலை அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று கூறினார். “தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன். உண்மையான வீரான எல். முருகன் தலைமையில் மாநிலத்தில் தேசிய உணர்வையூட்டும் வகையில் எனது பணிகளையும் முழு நேரத்தையும் செலவிடுவேன்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார். “நான் நரேந்திர மோதியின் மிகப்பெரிய ரசிகர். தேசிய பாதுகாப்பிலோ, ஊழலிலோ சமரசத்துக்கு இடமின்றி வலுவுடன் நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோதி….

Read More

தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தமிழக அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதையொட்டி, நேற்று நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, தி.மு.க.,வை கிழித்தெடுத்தார். இதைக் கருத்தில் கொள்கையில், தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது என்பது தெளிவாகிறது. அதே நேரம், காங்கிரஸ் மேலிடத்தில் நிலவும் குழப்பத்தால், தமிழக காங்., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி குழப்பம் நீடித்தால், தி.மு.க.,விடம் அதிரடியாக பேரம் பேசி, ‘சீட்’ வாங்குவது கடினம் என்றும் வருத்தப்படுகின்றனர். நேற்றைய சம்பவங்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில், கூட்டணி வியூகம் வகுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதைக் காட்டுகின்றன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, எட்டு மாதங்களே உள்ளதால், கொரோனா பரவலுக்கு மத்தியிலும்,…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் பெயரை கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.   கடந்த சில தினங்களுக்கு முன் ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இன்று குடியரசு கட்சி தேசிய குழு கூட்டம் நடந்தது. இதில் இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் ஆகிய இருவரின் பெயரையும், குடியரசு கட்சி தேசிய குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் அதிகாரப்பூர்வமாக…

Read More

லிபெரல் அரசாங்கம் CERB ஐ விரிவாக்குவதற்கு உறுதியளிக்கிறது, EI ஐ அதிகரிக்கும் !!

லிபெரல் அரசாங்கம் CERB ஐ விரிவாக்குவதற்கு உறுதியளிக்கிறது, EI ஐ அதிகரிக்கும் !!

செப்டம்பர் பிற்பகுதியில் லிபரல் சிறுபான்மை அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றால், தொற்றுநோய்களின் போது குறைந்தது 1 மில்லியன் மக்கள் தங்கள் வேலையின்மை நலன்களை இழக்க நேரிடும். இதுபோன்ற விளைவு, தாராளவாதிகள் 39 பில்லியன் டாலர் தொகுப்பின் ஒரு பகுதியை செயல்படுத்தத் தேவையான சட்டத்தைத் தடுப்பதைத் தடுக்கும். இது COVID-19 தொற்றுநோய்களின் போது வேலையை இழந்த மக்களை ஆதரிப்பதற்காக, கனடா அவசரகால பதிலளிப்பு நன்மை (CERB) வரும் வாரங்களில் இழக்க நேரிடும். வேலைவாய்ப்பு, தொழிலாளர் மேம்பாடு மற்றும் ஊனமுற்றோர் சேர்க்கை அமைச்சர் கார்லா குவால்ட்ரூ, எதிர்க்கட்சிகள் லிபெரல்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவதாக கூறினார். ஏனெனில் அவர்கள் CERB பற்றி எழுப்பியுள்ள கவலைகளை நிவர்த்தி செய்கிறார்கள், இது 68…

Read More

இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்

இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரனின் கருத்து நேற்றைய தினம் (20) அமைந்திருந்தது. “இலங்கை நாடானது தமிழர் பூமி” எனவும், “இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்” எனவும், “தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி” எனவும் விக்னேஷ்வரன் நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார். இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று (21) தெரிவித்துள்ளார். தமிழர்களின் சுயவுரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தில்…

Read More

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 75 கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ‘எக்மோ’ போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் அவருக்கு தேவைப்படுகிறது. செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை…

Read More

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் – பாரதிய ஜனதா  ( பா.ஜ.க )

மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்தாலும், தமிழின் தலைநகராக மதுரையை அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும். மதுரை தமிழ் அன்னையின் பூமி. சங்கம் வளர்த்து தமிழ்கண்ட பூமி. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போதிய வளர்ச்சி இல்லை. 60 ஆண்டுகளாக தமிழின் பெயரை சொல்லி ஆட்சிபுரிந்துள்ளனர். மதுரைக்கு, தமிழுக்கு என்ன பெருமை கிடைத்துள்ளது.ஜெ., முதல்வராக இருந்தபோது மதுரையில் பிரமாண்டமான தமிழன்னை சிலை அமைக்க வேண்டும் என்றார். ஜெ.,யின் கனவை நிறைவேற்ற, தற்போதைய அரசு மதுரையில்தமிழன்னை…

Read More

ஆஸி.,யில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பிரதமர் அறிவிப்பு

ஆஸி.,யில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் ஆஸி அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆஸியில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில்…

Read More

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக…

Read More

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி தானம் !!

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி தானம் !!

அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பருவமழை காரணமாக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாமில் 28 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இதுவரை வெள்ளத்திற்கு 128 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால்,தனது டுவிட்டரில் கூறியது, அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, அக்ஷய் குமார் தனது பங்களிப்பாக, ரூ. 1 கோடி வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள்….

Read More
1 2 3 4