இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

வரும் ஆக., 3 ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு வரையில் ரக்ஷா பந்தன் விழாவில் முக்கிய பங்குபெறும் கைகளில் கட்டப்படும் கயிறு சீனா தயாரிப்புகளாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பகுதியல் இந்தியா-சீன படையினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி தன்னம்பிக்கை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்திய வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இந்துஸ்தானி ராக்கியை பயன்படுத்தி நாடுமுழுவதும் ரக்ஷா பந்தனை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இந்தியாவிலேயே ராக்கி…

Read More

ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீ ஆண்டாள் திரு கல்யாணம் : ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 4

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதரடன் ஆண்டாளின் திரு கல்யாணம் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீ ஆண்டலின் முழு கதையையும் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள். ஆண்டலின் கதையை மீண்டும் மீண்டும் கேட்கும்போது உங்கள் வீட்டிலும் இதயத்திலும் பக்தியையும் மகிழ்ச்சியையும் நிரம்பியிருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இந்த விடியோவை பாருங்கள் .. பின் மீண்டும் பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்ஙளின் வாழ்கை மங்களகரமாக என்றெண்டுமிருக்க அன்னை அருளட்டும் 🙏🙏 வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் 🙏🙏 ரங்கா ரங்கா “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு…

Read More

சீனாவை துவம்சம் செய்யும் புயல் – மழை – வெள்ளம் !!

சீனாவை துவம்சம் செய்யும் புயல் – மழை – வெள்ளம் !!

சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதமடைந்து உள்ளன. மேலும் அங்கு கனமழைக்கான சூழல் நிலவுவதால், ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. ‘சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்;…

Read More

மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு – புகார்

மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு – புகார்

கடந்த 1980 களில், மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூஜெர்சியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நியூஜெர்சியின் மிச்சிகன் பிஷப்பாக தியோடர் மெக்கரிக் இருந்த போது, அவர் மற்றும் மேலும் 5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அதில் நான்கு பேர் கடற்கரை வீட்டில் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். கத்தோலிக்க கல்விக்காக ஒரு பாதிரியாரை சந்தித்த போது, அவர் தனக்கு பாலியல் தொந்தரவு…

Read More

யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்? பிரத்தியேக அறிக்கை

யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்?  பிரத்தியேக அறிக்கை

கொரோனா தொற்றால் லேசான அறிகுறி ஏற்பட்டு குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் மங்கிவிடும், அவர்களை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு வீரியமுடையதாக இருக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்வீடனின் உயர்மட்ட சுகாதார ஆணையம் செவ்வாயன்று, வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தொற்றுக்கு பின் அவர்களது உடல் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தாலும், செய்யாவிட்டாலும் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தது. அதே போல் லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் சமீபத்திய ஆய்வில், ஆன்டிபாடிகளின் அளவு, ஒரு அளவிற்கு…

Read More

ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் ஹௌஸ்டன் நகரில் சீனா உட்பட பல நாடுகளின் வர்த்தக மற்றும் அரசியல் தலைமையகங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படும். தற்போது சீன-அமெரிக்க மோதல் போக்கு காரணமாக ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது சீனாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடங்கி ஹாங்காங் கையகப்படுத்தும் சீனாவின் திட்டம் வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்து வருவது அனைவருக்கும் தெரியும். சீனாவை எப்படியாவது பழிவாங்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சீனா ஹாங்காங்குடனான…

Read More

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

கவலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் – இந்தியாவில் தடை ?

இந்தியா, டிக்டாக் ‘ஆப்’பை தடை செய்திருப்பது கவலையளிப்பதாக, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன ‘ஆப்’களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, 200 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டதற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நிறுவன ஊழியர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். பேஸ்புக் மீதும் பல உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்,…

Read More

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷி

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அத்வானி, மனோகர் ஜோஷி

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ராம ஜன்ம பூமி தீர்த்த ஷே த்திரா அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் காமேஷ்வர் சவுபால் தெரிவித்துள்ளதாவது, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

சைனீஸ் “டிக் டாக்” – ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்படுமா ?

சைனீஸ்  “டிக் டாக்” – ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்படுமா ?

சீன நிறுவனமான பைட் டேன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டிக் டாக் பொழுதுபோக்கு செயலி சமீபத்தில் இந்திய-சீன கல்வான் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் தடைசெய்யப்பட டிரம்ப் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலிக்கு தற்போது அலுவலகம்திறக்கப்பட்டுள்ளது. ஸ்காட் மோரிசன் தலைமையில் உள்ள ஆஸ்திரேலிய அரசு ஆஸ்திரேலிய நாட்டில் டிக் டாக் அனுமதித்தாலும் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது. டிக் டாக் செயலிமூலம் ஆஸ்திரேலிய அரசு தகவல்கள், ரகசியங்கள் உள்ளிட்டவை சிங்கப்பூர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயப்படுவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து டிக் டாக் செயலி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய டிக்டாக் தலைமை நிர்வாகி லீ ஹண்டர்…

Read More

பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்தது

பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்தது

பாக்.கில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,085 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,6 லட்சத்தை கடந்தது. அந்நாட்டில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,475 ஆனது. இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 1,83,737 பேர் குணமடைந்தனர், இருப்பினும் 1,895 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 1,10,068 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 31,486 பேரும், கைபர் பக்டுன்க்வாவில் 14,454 பேரும் இஸ்லாமாபாத்தில் 11,385 பேரும் பலுசிஸ்தானில் 1,808 பேரும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில்1,775 பேரும்…

Read More
1 2 3 4