பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

‘மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்து வருகிறது’ என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடுப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு நாம் எடுத்துள்ள கூட்டுத் தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் இது. பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும்…

Read More

குண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை !!

குண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை !!

உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர்….

Read More