இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இன்று (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை இன்று முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல…

Read More

சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு முக்கிய பொருளாதார வளமான கச்சா எண்ணெய், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் முக்கிய வருவாய் தரும் மெக்கா, மெதினா புனிததலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் செல்வம் கொழிக்கும் சவுதி, சிக்கன நடவடிக்கையில் இறங்கிவிட்டது. அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை(ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடிப்படை பொருட்களுக்கான வரியையும் 15 சதவீதமாக (3 மடங்கு) உயர்த்தி…

Read More

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக தங்கள் நாட்டு எல்லையில் சாலைப்பணி மேற்கொண்ட இந்தியாவிற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா சீனா எல்லைப்பகுதியான உத்தர்கண்ட் மாநிலம் தர்ச்சூலா என்ற பகுதியிலிருந்து கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக 80 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணியை இந்திய அரசு கடந்த வெள்ளியன்று துவக்கியுள்ளது. இப்பணிகள் நேபாளம் நாட்டின் லைப்பூலோக் கணவாய் வழியாக சாலை போடப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான நேபாளம் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது: இந்தியாவின் இந்த…

Read More

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,148 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 68,839 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். நோய் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) புதிதாக 1,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 178 பேர் பலியாகினர்….

Read More