கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்திலும் இதர பகுதி களிலும், கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினர் விளங்குகின்றனர். ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுவது குற்றமல்ல; ஆனால், தங்களுக்கு நோய் இருப்பதை மறைப்பது, மிகப்பெரிய குற்றம். இது கண்டனத்திற்குஉரியது. இந்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். – யோகி ஆதித்யநாத் , உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ., ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்! கொரோனா வைரசால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நம் உறவினர் மற்றும் நண்பர்களை இழந்து தவிக்கிறோம். பொருளாதார சீர்குலைவு, அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் மீண்டு வர, மக்கள் ஒன்றிணைந்து இந்த…

Read More

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யவுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களின் மூலம் நோய்த்தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கவே அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்தது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More