நடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

நடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,…

Read More

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  ”தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று  ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில்…

Read More

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – நம்பிக்கையை இழக்கும் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – நம்பிக்கையை இழக்கும் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிபர் டிரம்பின் கருத்துகள், அமெரிக்கர்களிடம் நம்பிக்கையை இழந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தும் டிரம்பின் யோசனையை பெரும்பாலானோர் நிராகரித்துள்ளனர். கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கொரோனா நோயாளிகள் உடலில் கிருமிநாசினி அல்லது புற ஊதா கதிர்களை செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்துபேசியதோடு, சுகாதார அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறியிருந்தார். டிரம்பின் யோசனைக்கு மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் அவற்றை செலுத்தி கொள்ள வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் டிரம்ப் அதனை நகைச்சுவையாக…

Read More

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் – 53 வயதில் அகால மரணம்

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் – 53 வயதில் அகால மரணம்

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான்கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அவர், இன்று திடீரென மரணமடைந்த சம்பவம் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அமிதாபச்சன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பானின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,…

Read More

ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு பிப்.,5 ம் தேதி முதல் வெளியுறவுத்துறையின் பொருளாதார பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Read More

ஒன்ராறியோவின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 700க்கு மேற்பட்டோர் சாவு !!

ஒன்ராறியோவின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 700க்கு மேற்பட்டோர் சாவு !!

COVID-19 தொற்றுநோய்களின் போது 700 க்கும் மேற்பட்ட நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் இறந்துள்ளனர். இதை ஒன்ராறியோ அரசாங்கம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது, மேலும் நர்சிங் ஹோம்களில் மேலும் ஆறு பேருக்கு தோற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. பொது சுகாதார புள்ளிவிவரதின்படி மாகாணத்தில் கொரோனா வைரஸின் 15,381 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மொத்தத்தில் 951 இறப்புகளும்… ஒருநாள் இறப்பு 59 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று மேலும் 525 கொரோனா தோற்று உறுதிசெய்யப்பதடின் மூலம், 3.5% தோற்று அதிகரித்துள்ளது. ஒன்ராறியோவில் கொரோனா வைரஸைப் பற்றிய இரண்டு ஸ்ட்ரீம்கள் உள்ளன – உள்ளூர் பொது சுகாதார பிரிவுகளிலிருந்தும், நீண்டகால பராமரிப்பு வசதிகளிலிருந்தும் – பொதுவில் வெளியிடப்பட்ட எண்கள் சரியான நேரத்தில் வெவ்வேறு புள்ளிகளிலிருந்து வரலாம்….

Read More

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கிம் ஜாங்  மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொதுவாக இல்லை. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை…

Read More

கொரோனா பரவலுக்கு பெண்களே காரணம் – இஸ்லாமிய மதபோதகரின் கருத்து

கொரோனா பரவலுக்கு பெண்களே காரணம் – இஸ்லாமிய மதபோதகரின் கருத்து

பெண்களின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் மனிதகுலத்தின் மீது ஏவப்பட்டு உள்ளது என்ற பாகிஸ்தான் மதபோதகர் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. மவுலானா தாரிக் ஜமீல் பாகிஸ்தானின் முன்னணி மத போதகர்களில் ஒருவர். அவரது பிரசங்கங்கள் ரமலான் மாதத்தில் பாகிஸ்தானின் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன, அவருக்கு  யூடியூப் சேனலில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர். ஜமீல் தப்லிகி ஜமாஅத் குழுவின் மூத்த உறுப்பினராக உள்ளார், இது பாகிஸ்தானில் தொற்றுநோயை விதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இவர் மார்ச் மாதத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட  கூட்டத்தை நடத்தினார். இதனால் வெகுவாக கொரோனா பரவியதாக அவர் மீது குற்றம்சாட்டபட்டது. இந்த…

Read More

COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!

COVID-19 லாக்கடௌன் சமயத்தில் கொண்டாட குழந்திகளுக்கும் பெரியோருக்குமோர் நற்செய்தி !!

இந்த COVID-19 லாக்கடௌன் சமயம்.. குழந்தைகள் மற்றும் பெரியோர்களென எல்லோருக்குமே சோதனையான காலகட்டம். இந்த இக்கட்டான கால கட்டத்தை உங்களின் குடும்பத்தில் ஒருவனாக கனடா உதயன் பகிர்ந்துகொண்டு இன்பத்தை பரிமாறவுள்ளது !! எல்லா குழந்தைகளும் தங்களின் பிரிந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடவே விரும்புகின்றனர். ஆனால் இந்த லாக்கடௌன் சமயத்தில் அது முடியாது.இதனால் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதை தடுக்கவும், நம்மால் முடிந்தவரை குழந்தைகளை இன்புறவைக்கவும் இன்று முதல் மே மாத கடைசிவரை 12 வயதுவரை உள்ள குழந்தைகளின் பிறந்த நாளை நீங்கள் கனடா உதயனின் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரிக்கலாம். குழந்தைகளை இன்புறச்செயும் முயற்சியாக இது இணையதளத்தோடு நம்முடைய எல்லா சமூக வூடகங்களிலும் பிறந்தநாள்…

Read More

நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகா, சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில், மருத்துவமனைகளை பராமரிக்க வேண்டும் அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அதற்கு எதற்கு இந்து கோவில்களை சொல்ல வேண்டும். ஏன் மற்ற மத…

Read More
1 2 3 5