சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

கொரோனா வைரஸ் தொற்று, சீனா – அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது. ‘கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. இதற்கு பதிலடி கொடுக்கும்…

Read More

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

‘ஈரானில் கொரோனாவின் கொலைவெறிக்கு, 10 நிமிடங்களுக்கு ஒரு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது’ என, ஈரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தன் கொலைவெறிக்கு உலகம் முழுவதும் இதுவரை, 10 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா பரவிய சீனா, தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால், 170க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் ஈரானும் இந்த வைரசால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் சீனாவில் – 3,248, இத்தாலியில் – 3,405, ஈரானில் – 1,284 பேர் பலியாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து…

Read More