அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!

அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக 43 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. அதன் முடிவுக்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 1.84 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 7,157 பேர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில், இந்த வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய மருத்துவ மையம், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி பரிசோதனையை…

Read More

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?

உலகில் உள்ள 162 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 1,82,725 பேருக்கு பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தாலியில் மட்டும் இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர். 23073 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் பரவுகிறது என்பது குறித்து இத்தாலி அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளவருக்கு எந்தவித பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளியை தொடும் உறவினர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதன்மூலமும் கொரோனா பரவுகிறது என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. இதற்கு…

Read More