கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா- வெறிச்சோடும் நகரங்கள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா- வெறிச்சோடும் நகரங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன; அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் பெரும் விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதுஇந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அடுத்த 14 நாட்களுக்கு …

Read More

இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் சந்தித்து கொண்ட போது, இருவரும் கைகுலுக்காமல், இந்து பாரம்பரிய முறைப்படி வணக்கம் (நமஸ்தே) தெரிவித்து கொண்டனர். சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரானில் ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா அச்சுறுத்தலை தடுக்க முகமூடி அணியவும், கைகுலுக்குவதை தவிர்த்து, வணக்கம் தெரிவிக்க வேண்டும். சற்று இடைவெளி விட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் கூட, கொரோனா பரவுதலை தடுக்க இந்தியர்களை போல் நமஸ்தே சொல்ல…

Read More