ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

நடிகர் ரஜினிகாந்தை சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்று கூறுபவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடிகர் ரஜனிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் இச்சந்திப்பு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து துக்ளக்…

Read More

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி

” திருவள்ளுவரை வணங்குகிறேன்”- மோடி

திருவள்ளுவர் தினத்தை அவரை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழிலும், ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், Narendra Modi ✔ @narendramodi திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன.

Read More

விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

கோல்கத்தா துறைமுகத்தை தொடர்ந்து விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி, ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஜன.,12 அன்று நடைபெற்ற கோல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, கோல்கத்தா துறைமுகத்திற்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான சுப்ரமணியன் சாமி, இதே போன்று விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி ராணி லட்சுமி பாய் மஹால் என வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read More