10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்கிறது ஆஸி., அரசு

ஆஸி.,யில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதிக தண்ணீர் குடிப்பதாகக் கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5 நாள் திட்டத்தை துவக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு, ஒட்டகங்களை கொல்வதற்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது. அதிகளவு உணவு, குடிநீர் அருந்துவதாலும், உள்கட்டமைப்பை சேதப்படுத்துவதுடன், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாலும் ஒட்டகங்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரிதா பகர் என்பவர் கூறுகையில், ஒட்டகங்கள் தங்களுக்கு பெரிய தொந்தவு கொடுக்கிறது. எங்கள் வீட்டு மேற்கூரைகளை தட்டுகிறது. வீடுகளில் ‘ஏசி’க்களில் உள்ள தண்ணீரை குடிக்கிறது. இதனால், வெப்பம் அதிகரிப்பதுடன், அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் முதல்…

Read More

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நியூயார்க் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள, அர்ச்சனா ராவ், தற்போது, நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 17 ஆண்டுகளாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சமீபத்தில், நிதி முறைகேடு தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தீபா அம்பேகர், 2018, மே மாதம், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது…

Read More

அமெரிக்கா மீது இரான் தாக்குதல் !!

அமெரிக்கா மீது இரான் தாக்குதல் !!

இராக்கில் செயல்பட்டு வந்த தங்களின் ராணுவத் தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களில் இராக் மற்றும் இரானில் நடந்த 10 முக்கிய விஷயங்களை இங்கு தொகுத்துள்ளோம். இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த குறைந்தது இரண்டு ராணுவ தளங்கள் மீது இரானில் இருந்து டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட…

Read More