முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் !!

முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் !!

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவீதத்தினை, கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த நிலையில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், சிறுகட்சிகளும், சிறுபான்மை சமூகங்களும் நாடளுமன்ற உறுப்பினர்களை பெறுவதில் பாரிய தடை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது….

Read More

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவர்மீது வங்கதேசத்தில் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக சின்ஹா உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு கமிஷன் வங்க தேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலபதிர்கள் இருவர் போலி ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும் அந்த தொகை முழுவதும் சின்ஹாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது….

Read More

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் குறித்து அதிகம் பேசும் அரசியல்வாதிகளாக திருமாவளவன் மற்றும் சீமான் இருக்கின்றனர். இருவரும் தமிழ் தேசியம் என்ற கோட்பாடை கொண்டிருந்தாலும், அரசியலில் வெவ்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை உள்ளது, தமிழர் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது தன்னால் மட்டுமே முடியும், என க்கூறும் சீமான் தனியாகவே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திருமாவளவன், இதே கோரிக்கையுடன் இருந்தாலும், தற்போது திராவிடத்தை முன்னிறுத்தும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது குறித்து திருமாவளவன் பேசியதாவது: கோட்பாட்டில் நம் இருவருக்கும் மாறுபாடு…

Read More