இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகளும், இரண்டு கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியுண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார். ஹப்புத்தளை பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். விசாரணைகளின் பின்னரே விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்களை வெளியிட முடியும் என இலங்கை விமானப்படை…

Read More

அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தி.மு.க.,வின் கை சற்று ஓங்கி உள்ளது. மாவட்ட கவுன்சிலர்களாக, அதிமுக கூட்டணி 243, திமுக கூட்டணி 267, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களாக அதிமுக கூட்டணி 2,165, திமுக கூட்டணி 2,330, மற்றவை 536 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. – தி.மு.க. கூட்டணி…

Read More

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு…

Read More