இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்தியா வருகிறார் கோத்தபய ராஜபக்சே – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே 29ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தநிலையில், மோடியின் அழைப்பை ஏற்று…

Read More

முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது

தி.மு.க. நாளிதழான முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக பா.ஜ.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ‘முரசொலி அலுவலக இடத்தை அரசிடம் ஒப்படைத்தால் ௫ கோடி ரூபாய் தருகிறோம்’ என்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தி.மு.க. திட்டித் தீர்த்துள்ளது. ‘சென்னையில் முரசொலி நாளிதழ் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது’ என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலத்தின் பட்டா ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட்டதும் ‘மூலப் பத்திரத்தை வெளியிடுங்கள்’ என ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பிலும் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா என தமிழக அரசு பதில்…

Read More

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் – நாமல் ராஜபக்‌ஷ

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் – நாமல் ராஜபக்‌ஷ

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது…

Read More