பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில், சாகஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தன், 16வது பிறந்த நாளை, நேற்று முன்தினம் கொண்டாடினார். பள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன், திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சரமாரியாகசுட்டார்.இதில், 16 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் மூன்று பேர், காயமடைந்தனர்.

Read More

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

சிதம்பரம், 74, மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், இந்த முறைகேட்டில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ம் ஆண்டில், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற, விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராகவும், சிதம்பரம் நிதி அமைச்சராகவும் இருந்தனர். நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அன்னிய முதலீட்டு வாரியம், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்ததாக கூறப்பட்டது. இதற்காக, கார்த்திக்கு சொந்தமான நிறுவனங்கள் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யும், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்…

Read More

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது. கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம் ஆகும். இந்த பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார். மாலை 6:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து செல்வார். மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியும் இதே போன்று அழைத்து செல்லப்படுவார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை…

Read More