கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?

கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?

இலங்கையில், நாளை அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோத்தபயா ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாவதால், அரசியல் கட்சி தலைவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். இலங்கையில், அதிபர் தேர்தல் நாளை நடக்கஉள்ளது. இதில், 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும், சஜித் பிரேமதாசாவுக்கும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிங்களர்களின் முழு ஆதரவு உள்ளதால், கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, இலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கோத்தபயா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். இவர், ராணுவ அமைச்சராக இருந்தபோது, அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர்,…

Read More

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்?

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்?

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள்? அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா? இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடுகின்றனர். இதில் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜனும் தனது ஆதரவை கோட்டாபயவுக்கு வழங்கியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தல் நெருங்கியபோது, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டுமென பேசப்பட்டுவந்தது….

Read More

டுவிட்டரில் உளறிய ஸ்டாலின் – மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது

டுவிட்டரில் உளறிய ஸ்டாலின் – மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி  ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது

மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பதிவு நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பழனிசாமி உள்ளார். ஆணைய செயலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி செயல்பட்டு வந்தார். பேரூராட்சி இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இன்று(நவ.,14) அவர் பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆணைய செயலராக விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். செயலர் மாற்றம் பற்றிய தகவல் வெளியானதும் ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கண்டன அறிக்கை பதிவிடப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு…

Read More