அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் உயிரிழந்தார்

அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் உயிரிழந்தார்

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஞாயிறன்று இரவு 9.30 மணியளவில் சென்னையில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. 1955ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்.. கடந்த தசாப்தத்தில் டி.என். சேஷனை விட வேறு எந்த அதிகாரியும் இவ்வளவு பெயரைப் பெற்றதில்லை. இந்திய அரசியல்வாதிகள் கடவுளுக்கும் டி.என்.சேஷனுக்கும் மட்டுமே பயப்படுவார்கள் என 90களில் வேடிக்கையாகப் பேசப்பட்டது. சேஷனுக்கு முந்தைய தேர்தல் ஆணையர்கள் அனைவரும் அரசின் விருப்பப்படியே செயல்பட்டு வந்தனர். சேஷன்…

Read More

ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு

ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு

நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு, 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா முதல்-மந்திரி பதவி கேட்டு பிடிவாதம் பிடித்ததால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பாஜக பின் வாங்கியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்.எல்.ஏவுமான ஆதித்ய தாக்கரே கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க விரும்புவதாக கவர்னரிடம் கூறினோம். ஆட்சி அமைக்க கூடுதலாக 48 மணி நேரம் அவகாசம் கேட்டோம். எங்கள் கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்கவில்லை. ஆனால், ஆட்சியமைக்க அவகாசம் தர மறுக்கிறார். மராட்டியத்தில்…

Read More

பாலியல் தொடர்பு மூலமும் டெங்கு வைரஸ் பரவும்..!

பாலியல் தொடர்பு மூலமும் டெங்கு வைரஸ் பரவும்..!

டெங்கு வைரஸ் ஆனது கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் கடும் காய்ச்சலால் அவதிப்படுவார்கள். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் டெங்கு தாக்கி, பல உயிர்கள் பலியாகியுள்ளன. கொசுக்கள் மூலமாகவே டெங்கு வைரஸ் பரவும் என்று கருதப்பட்ட நிலையில், வேறு வழியிலும் பரவலாம் என்பதற்கான ஒரு சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது. பாலியல் தொடர்பு மூலம் டெங்கு வைரஸ் பரவிய முதல் வழக்கை ஸ்பெயினில் உள்ள மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை…

Read More