அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?

அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?

சமீபத்தில், ஹூஸ்டன் நகரில் நடந்த, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பங்கேற்றார். ‘இனி டிரம்ப் அரசு’ என, மோடி பேசினார். அமெரிக்க விவகாரத்தில் தலையிடும் வகையில், மோடியின் பேச்சு இருந்ததாக, காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பேசவில்லை. அவருடைய பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவருடைய பேச்சை திரித்துக் கூறுவது சரியல்ல. ‘கடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இனி டிரம்ப் அரசு’ என, அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, டிரம்ப் பிரசாரம் செய்தார்’ என்று தான், மோடி கூறினார். அமெரிக்காவின்…

Read More

கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

“ பிறைசூடி” ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட கனடாவின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான “கனடா உதயன்” தனது 24 வது ஆண்டில் மிகவும் பெருமையுடனும், அழகாகவும், நேர்த்தியாகவும் எவ்வித குறையும் இன்றி பல் சுவைக் கலை விழாவினை 28-09-2019 சனிக்கிழமை அன்று டொரோண்டோ ஆர்மினியன் இளைஞர் கலை மண்டபத்தில் நடத்தியது. மண்டபத்தை ஓரளவு நிறைத்த பார்வையாளர்கள். சிறப்பு விருந்தினர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறப்புக் கலைஞர்கள், பேச்சாளர்கள். ஊடக, புகைப்பட, வீடியோ நிபுணர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து சிறப்பித்தனர். உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் மற்றவர்களது செயற்பாட்டில் இருந்து வேறுபட்டு எப்போதுமே தனது நிகழ்ச்சிகளை நடத்துபவர்….

Read More

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து மையங்கள், மாவட்ட புறநகர்களில் உள்ள சேரி பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்களை, போலீசார் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சட்டவிரோதமாக ஆவணங்கள் பெற உதவிய அரசு அலுவலர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் கைரேகை மற்றும் அடையாளங்களை பதிவு செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாளங்களை வைத்திருப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பு….

Read More

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே – விக்னேஸ்வரன்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே – விக்னேஸ்வரன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு…

Read More
1 5 6 7