முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஸ்டாலின், நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால், ‘முரசொலி’ நிலம் குறித்த பட்டாவை, எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில், மூல ஆவணங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.மூல ஆவணங்களை வெளியிட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும், வெளியிட ஸ்டாலின் மறுப்பது ஏன்? சென்னை அறிவாலயம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., அலுவலகம் அமைக்க, முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

Read More

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. நீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய…

Read More

ஹரியானாவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி – பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி

ஹரியானாவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி – பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி

ஹரியானாவில் பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி முடிவானது. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில்: துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை கவர்னரிடம் நாளை தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்குவோம் என்றும் கூறினார். நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., 40 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் சுயேட்சை 6 இடங்களிலும், ஜனநாயக ஜனதாகட்சி 10 இடங்களிலும் வெற்றி…

Read More

‘ரூ.800 கோடி’ வரி ஏய்ப்பு: கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறை வழக்கு

‘ரூ.800 கோடி’ வரி ஏய்ப்பு: கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறை வழக்கு

வருமான வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, ‘கல்கி’ சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது,அன்னிய செலாவணி சட்டத்தில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார். இவர், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில், வரதய்யபாளையம் என்ற இடத்தில், பல நுாறு ஏக்கர் பரப்பளவில், கல்கி பகவான் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இதன் கிளைகள், நாடு முழுவதும் உள்ளன; வெளிநாடுகளிலும் உள்ளன. கல்கி சாமியார் என அழைக்கப்படும், விஜயகுமாரை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, 16ம் தேதி, 250க்கும் மேற்பட்ட, வருமான வரி அதிகாரிகள், 40…

Read More

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்த, இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25…

Read More

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக.,வின் நாராயணன் 32,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது: இடைத்தேர்தலில் மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினும், அவரின் கூட்டணி கட்சியினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்ற தொகுதியில் கூட அதிமுக.,வுக்கு மக்கள்…

Read More

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார். யார் இந்த கெரி ஆனந்தசங்கரி? இலங்கையின் மூத்த தமிழ்…

Read More

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகியை டுவிட்டரில், இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பாக்.,நாட்டு பாடகியான ரபி பிர்சதா (Rabi Pirzada) என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்து சரமாரியாக கருத்து பதிவிட துவங்கினர். இதில் ஒருவர், இது பாக்.,கின் தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாக்., முழு ஆதரவு அளிப்பது…

Read More

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். விரைவில் போராடி இதில் இருந்து வெளியே வருவோம் என டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல் கூறி உள்ளார். வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் செப்., மாதம் சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 23 வயதாகும் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2013 ல் ரூ.1 கோடியாக இருந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு 2018 ல் ரூ.100 கோடிக்கும் மேலாக அதிகரித்தது எப்படி என…

Read More
1 2 3 4 7