நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே ஐஎம்எஃப் கூறியிருந்தது. தற்போதுள்ள மந்தநிலை சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான். இந்தியாவில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஊரக வருவாய் வளர்ச்சி பலவீனமாக உள்ளதோடு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்புகள் உள்ளன. இந்த காரணிகள் முதலீடு, நுகர்வு ஆகிய இரு அம்சங்களிலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

Read More

சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,- சிவசேனா கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அரியானாவிலும் பா.ஜ., வே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு டி.வி மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில்; மஹாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா, கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.,166 முதல் – 194 , காங் 72 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் அரியானாவில் மீண்டும் பா.ஜ.,வே ஆட்சியை பிடிக்க…

Read More