பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும். பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இதுதொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகிறது….

Read More

துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், சிரியாவில் குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அரசு தெரிவித்தது. வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி ஒன்பதாவது நாளாக தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடந்த 9-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் டிரம்ப் எழுதிய கடிதம்…

Read More

மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் பார்லி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போது, நாட்டு நலனுக்காகஎடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அப்போது, அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும். காங்கிரஸ் தலைவர் ஒருவர், காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்தால், சிறப்பு சட்டம் நீக்கம் என்ற முடிவை பா.ஜ., எடுத்திருக்காது என கூறினார். நீங்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து முஸ்லிம் என பார்க்கிறீர்களா? காஷ்மீர் குறித்த…

Read More