துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை – டிரம்ப் அதிரடி

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை – டிரம்ப் அதிரடி

சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்தீஷ் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 800க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்தீஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது….

Read More

மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது

மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்தே மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சர்ச்சையைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மலேசியாவில் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் இது பரபரப்பையும் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கையைப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனை திசைதிரும்பும் வகையிலேயே இந்த புதிய விவகாரம் திட்டமிட்டு எழுப்பப்பட்டுள்ளதாக சிலர் மலேசிய அரசை மறைமுகமாக விமர்சிக்கின்றனர். இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்…

Read More

டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை –  தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது

டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை –  தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளது. தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம்…

Read More