இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு

இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனா இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி, கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரா, கொழும்பு நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறினார்.

Read More

இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு

இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு

சீன அதிபர் சென்னை மாமல்லபுரம் வருவது உறுதியான பின்னும், மத்திய அரசு இது குறித்து அலுவல் பூர்வமாக ஏதும் தெரிவிக்காமலிருந்தது. ஆனால், அதே நேரம் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தது. இப்படியான சூழலில் இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது . இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இந்தியா நீக்கியவுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஐ.நா. சபையில் எழுப்பியது சீனா. பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அது அமைந்திருந்தது. ஆனால், தற்போது சீன அதிபர் ஷி…

Read More

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், சிறை விதிமுறைகளை மீறி தனி சமையல், சிறையிலிருந்து வெளியே சென்றது உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார். விஷேச சலுகைகளுக்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சசி தரப்பிலிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இப்புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது….

Read More