ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று ‘ஷாஸ்த்ரா பூஜை’ செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். விமானங்களில் ஆர்பி – 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத்…

Read More

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் உட்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் அசிம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது அரசின் மிக தைரியமான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். விஜயதசமி நாடு முழுவதும்,கொண்டாடப்பட்டு வருகிறது. நாக்பூரில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியதாவது: தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நாட்டில் சிலர் வன்முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது. சமூகத்தில் சில அருவருக்க தக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்த தேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப்படுத்துவதற்காக…

Read More