‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர்….

Read More

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா போட்டி இல்லை – கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிறார்

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா போட்டி இல்லை – கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிறார்

அதிபர் சிறிசேனா வின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து அங்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இவர் எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே போட்டியிட விரும்பினார். இதே போன்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் களம் இறங்க விருப்பம் கொண்டார். ஆனால், கட்சியில் பெரும்பாலோர் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். இதையடுத்து அவர் வேட்பாளராக ஒருமனதாக அறிவிக்கப்பட்டார். இதுவரை…

Read More

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ ஆட்சியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகினர் என்று ஒரு அதிகாரி ஏ.எஃப்.பி கூறினார். பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிகுண்டு ஒன்று விசப்பட்டதாக நங்கர்ஹார் கவர்னர் செய்தித் தொடர்பாளர் அதாவுல்லா கோக்யானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 10 பலியாகினர், மற்றும் 27 பேர் காயமடைந்தனர், என்று அவர் கூறினார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கிய 18-வது ஆண்டு நினைவு நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More