இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் பயணத்தை தவிர்ப்பதன் ஊடாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடனான உடன்படிக்கையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. கலந்துரையாடல் இந்த நிலையில், பாகிஸ்தானிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பிலான விசேஷ கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டிருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த கலந்துரையாடலின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read More

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் பால்டனுக்கும். அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது தனது டுவிட்டரில், “நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார்….

Read More

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளார். பல்தேவ் குமார் என்பவர் தனது மனைவி பாவனா, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், பஞ்சாபில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கியுள்ளார். இது குறித்து, மைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பரிகொட் தொகுதி எம்எல்ஏ., ஆக இருந்த பல்தேவ் குமார் கூறுகையில், கடந்த ஆக., 11 இந்தியா வந்தேன். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன. கொல்லப்படுகின்றனர். இரண்டு வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். முழு மனதுடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி…

Read More