சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா

சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர் : அமித் ஷா

”அசாமில் மட்டுமல்ல, நாடு முழுவதும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் வெளியேற்றப்படுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா உறுதிபட கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலமான, அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக குடியிருந்ததாக, 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ‘அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்டு, சட்டவிரோதமாக குடியிருப்பது உறுதியானால் வெளியேற்றப்படுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியிருந்தார். இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, வடகிழக்கு முற்போக்கு கூட்டணியின் கூட்டம், அசாம் மாநிலம், கவுஹாத்தி யில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய, வடகிழக்கு மாநில முதல்வர்கள் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்,…

Read More

பாக்., முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம்

பாக்., முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம்

பாக்,, சார்பில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பாக்.,ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாக்.,ன் நிதி பற்றாக்குறையானது 2018-19 ம் நிதியாண்டில் உச்சத்திற்கு சென்றுள்ளது. பாக்.,ன் பொருளாதார சூழலை கணக்கில் கொண்டு சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் பாக்.,க்கு நிதியுதவி அளித்து வருகின்றன. பாக்.,ல் எண்ணெய், எரிவாயு, மின்சாரம் என அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக பாக்., சார்பில் செப்.,4 முதல் 8 ம் தேதி வரை அஜர்பய்ஜனில் முதலீட்டாளர்கள்…

Read More

ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவிற்க பல அமெரிக்கர்களின் உயிர்களை விலையாக கொண்டுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்காவை தாலிபன்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தாலிபன் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வீரர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கம் விதமாக தாலிபன்கள் அறிக்கை ஒன்றைய வெளியிட்டுள்ளனர். அதில், “ஆப்கானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எங்களின் தாக்குதல் தொடரும். டிரம்பின் இந்த செயல் அமெரிக்காவில் பல இழப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அமைதிக்கு எதிரான நிலைப்பாடு இதன்…

Read More