பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பி அமைச்சர் பதவியில் இருந்து விலகல் – பிரெக்ஸிட் சர்ச்சை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்பி அமைச்சர் பதவியில் இருந்து விலகல் – பிரெக்ஸிட் சர்ச்சை

குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி தமது அமைச்சர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன். வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யுமான ஜோ தமது பணியில் தீர்க்க முடியாத நெருக்கடி இருந்துவந்ததாக குறிப்பிட்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டுமா, விட்டு விலகவேண்டுமா என்பதற்காக 2016ல் நடத்தப்பட்ட பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்கவேண்டும் என்று வாக்களித்தார் ஜோ. அதே நேரம், அவரது சகோதரர் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாகப் பிரசாரத்தை முன்னின்று நடத்தினார். பிரதமர் தெரீசா மே தயாரித்த வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…

Read More

திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார்

திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த அறை, பொருளாதார குற்றவாளிகள் அடைக்கப்படும் பகுதியில் உள்ளது. ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று (செப்.,5) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும் , ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஐஎன்எக்ஸ்…

Read More

செப்டம்பர் 28ம் திகதி உதயன்-2019 பல்சுவைக் கலைவிழா

செப்டம்பர் 28ம் திகதி  உதயன்-2019 பல்சுவைக் கலைவிழா

எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ள உதயன்-2019 பல்சுவைக் கலைவிழாவில் மீண்டும் மலேசியாப் பாடகர் ரவாங் ராஜா. சில வருடங்களுக்கு முன்னர் உதயன் பல்சுவைக் கலைவிழாவிற்கு அழைக்கப்பட்டு அங்;கு தமிழ் மற்றும் சீன மொழிப் பாடல்களைப் பாடிய ரவாங் ராஜா மீண்டும் எமது மேடையில்.. செப்டம்பர் 28ம் திகதி சனிக்கிழமை..

Read More