பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது. தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ”தனிப்பட்ட சுதந்திரம்” என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது. பிரா அணியாத இயக்கம் ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும்,…

Read More

பிரெக்ஸிட் ஒப்பந்தம் – போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் – போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பொதுஅவையில் நடந்த வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார். தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்…

Read More

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்

ஒடிசாவில் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட அபராதங்கள், நாடு முழுவதும், 1ம் தேதி(செப்.,1) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியது, ஆட்டோவில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லாததற்காக, ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காற்று மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வண்டிக்கு பர்மிட் இல்லாததற்காக ரூ.10 ஆயிரம், பதிவெண் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், இன்சுரன்ஸ் புதுப்பிக்காததற்காக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47,500…

Read More