சிதம்பரத்திற்கு ஜாமின் கொடுத்தால் வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடுவார்

சிதம்பரத்திற்கு ஜாமின் கொடுத்தால் வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடுவார்

‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு 2007ல் காங். தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் கடந்த ஆக., மாதம் தள்ளுபடி…

Read More

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஓய்வுபெற்ற இரண்டே மாதத்தில் அரசியலில் நுழையும் முன்னாள் ராணுவ தளபதி

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஓய்வுபெற்ற இரண்டே மாதத்தில் அரசியலில் நுழையும் முன்னாள் ராணுவ தளபதி

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க களமிறங்கியுள்ளார். தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இலங்கை ராணுவத்தின் 22ஆவது தளபதியாக ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடமையாற்றியிருந்தார். நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாக தேசிய மக்கள் இயக்கம் அமைந்துள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. முன்னாள் கணக்காய்வாளர்…

Read More

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. அரம்கோ மீதான தாக்குதலால் ஈரான் – சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…

Read More

ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஜனனி குமார் அவர்களின் மாணவி துஷ்யா பகீரதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மிகவும் சிறப்பான, அழகிய கலை பரத நாட்டியம் ஆகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக என்றாலும் ஆண்களும் இதனை ஆடுவது உண்டு. சைவ சமயத்தவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமான் கூட நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுகிறது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவம் ஆகும். மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆடுவது “ஆனந்ததாண்டவம்’ ஆகும். அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் “ருத்ரதாண்டவம்”. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடுவது “லாஸ்யா” என்று அழைக்கப்படுகிறது. உடல் அசைவுகளும் கை முத்திரையும் சேர்ந்து “அடைவு” ஆகும்.பரதநாட்டியத்திற்குப் பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக் கருவிகள் தேவை. பரதம் நிருத்தம், நிருத்தியம்,…

Read More

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

கனடாவில் முதற் தடவையாக நடைபெறும் Miss Tamil Universe”

உலக தமிழ் அழகி போட்டிகளும் முடிசூட்டும் பெருவிழாவும 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு நிகழ்வு தொடர்பான ஊடகச் சந்திப்பு மற்றும் விருந்துபசாரம் ஆகியன நேற்று இரவு நடைபெற்றிருந்தன. கனடாவில் உள்ள வெற்றிகரமான தமிழர் நிறுவனங்களான Vibrant Hospitality Group and AGA Beauty. ஆகியவை இணைந்து வழங்கும் இந்த சர்வதேச அழகுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தமிழ் அழகி என்னும் பட்டத்தைப் பெற்று முடிசூட்டப்படும் ஆர்வத்தோடு பல நாடுகளிலிருந்;து அறிவும் ஆற்றலும் அழகும் அற்புதமும் கொண்ட இளம் தாரகைகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் பல வர்த்தகப்…

Read More

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடிய ‘கலாச்சாரம்’ தொடர்கின்றதா?

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடிய ‘கலாச்சாரம்’ தொடர்கின்றதா?

ஸ்காபுறோவில் மீண்டும் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடுமை தொடர்கின்றதா? என்;ற அதிர்ச்சி அலைகளை எழுப்பும் கேள்வி தோன்றியுள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எமது சமூகத்தையும் இளைய வயதினைரையும் கதி கலங்கச் செய்த அந்த ‘இருண்ட காலம்’ மீண்டும் உயிர் பெற்று எழுந்து விட்டதா என்ற ஏக்கப் பெருமூச்சும் எம்மைப் பின் தொடர ஆரம்பித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை ஸ்காபுறோவில் படுகொலை செய்யப்பட்ட சாரங்கன் சந்திரகாந்தனின் என்னும் தமிழ் பேசும் இளைஞனின் இழப்பு எமது சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனியும் என்ன நடக்கப்போகின்றன என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு ‘நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இந்த இளையவனின் இரத்தம் கொடிய…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக…

Read More

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(21). இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்தார். இரண்டு முறை ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மூன்றாவது முயற்சியாக, மே 5 ல் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யாவை பங்கேற்க வைத்தார். இதில், அவர், 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இணைந்தார். இவர் மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்ததும், தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரியவந்தது.  இது தொடர்பாக கல்லூரி…

Read More

75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பா.ஜ

75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பா.ஜ

அரியானா மாநிலத்தில் 75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பா.ஜ., உறுதியாக கூறி உள்ளது. 70 வயதை கடந்தவர்களுக்கு எந்த ஒரு தேர்தலிலும் சீட் வழங்க கூடாது என்பது பா.ஜ., வின் கட்சி கொள்கைளில் ஒன்றாக உள்ளது. இதில் மாநில அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம் எனவும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா , அரியானா மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் 90 சட்டசபை இடங்கள் உள்ளன. இத் தேர்தலில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலர் தங்களின் வாரிசுகளை களம் இறக்க முடிவு…

Read More

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – ரோகித் சர்மா இணை வந்த வேகத்தில் பிரிந்தது. தென்னாப்பிரிக்க வீரர் ரீஜாவின் பந்துவீச்சில் பியூரனிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்…

Read More
1 2 3 6