“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஷ

“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஷ

வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். தனக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை, எல்லைக்குள் இருந்து நிறைவேற்றாது, எல்லைக்கு அப்பாற் சென்று நிறைவேற்றுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைவாகவே எல்லைக்கு அப்பாற் சென்று தனது பொறுப்பை…

Read More

காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது – பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது – பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370–ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்த பிரிவு பயன்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளதால், அந்த மாநில மக்கள் இனிமேல் பிற மாநிலத்தவர்கள் பெற்று வரும் உரிமைகளை பெறுவார்கள். அந்த மாநில வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும்’ என்று தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக 370–வது பிரிவின் விலங்குகளில் இருந்து காஷ்மீர் மக்களுக்கு விடுதலை அளிக்க காங்கிரஸ்…

Read More

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

‘தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும்’ என சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார். கவர்னர் மாளிகையில் அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது போது இந்த நெருக்கடி தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய ‘கற்றல், கற்பித்தல், தலைமையேற்றல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று முன்தினம் சென்னை வந்து கவர்னர் மாளிகையில் தங்கினார். அப்போது அமித்ஷாவை தமிழக முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்து…

Read More