ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” – ரணில் விக்ரமசிங்க

ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” – ரணில் விக்ரமசிங்க

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ”சஹ்ரானை சந்திக்காதவர்கள் சிலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் சென்றுள்ளனர். சஹ்ரான் தமிழ் மொழியில் போதனை செய்துள்ளமையினால், அது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, தென்னிந்தியாவிற்கும் அது பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது….

Read More

வைகோ – காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

வைகோ – காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவும் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை ரத்துசெய்யவுமான மசோதாக்கள் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். அந்தப் பேச்சில் அவர் காங்கிரஸ் கட்சியையும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் கடுமையாகத் தாக்கினார். “காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு வாக்குறுதியளித்தார். ஆனால், நடத்தப்படவில்லை. இதையடுத்து 1958ல் ஷேக் அப்துல்லா போராட்டம் நடத்தினார். அவர் கொடைக்கானலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதையே பொது வாக்கெடுப்பு என்று சொன்னார்கள். ஒரு மோசடியை காங்கிரஸ் கட்சி நிகழ்த்தியது. எனக்கு நேருவின் மீது மரியாதை இருக்கிறது….

Read More

கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் கடந்த ஒருவாரமாக தீவிரமாக பெய்துவரும் பருவமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில் நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மிக அதிகன மழைக்கும், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய…

Read More

காஷ்மீரில் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது: பிரதமர் மோடி

காஷ்மீரில் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது: பிரதமர் மோடி

‘காஷ்மீர், லடாக்கில் இனி பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது. காஷ்மீர் மக்களுக்கு மறுவாழ்வு துவங்கியுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 40 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீர், லடாக் மக்கள் துயரத்தில் இருந்தனர். நீண்ட நாட்களாக இருந்த அவர்களது துயரம் தற்போது நீங்கி உள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர்….

Read More