இலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா உருவச் சிலை உடைப்பு – போலீஸ் குவிப்பு

இலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா உருவச் சிலை உடைப்பு – போலீஸ் குவிப்பு

கட்டுவாப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்டுவாப்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போலீஸார், விசேட அதிரடிபடை மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா உருவச் சிலையொன்று அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கட்டுவாப்பிட்டி பகுதியில் இன்று காலை அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், சிறிது நேரத்தில் குறித்த பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு…

Read More

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாவத் சவுத்ரி, இந்தியா உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இந்திய தூதர் ஏன் இங்கே இருக்கிறார்? நாம் ஏன் தூதரக உறவுகளை துண்டிக்கவில்லை? இரு நாடுகளுக்கும் இடையில் தூதரகம் இல்லாதபோது, அங்கு (இந்தியாவில்) நமது தூதர் என்ன செய்கிறார்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், ‘‘காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது’’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘பாகிஸ்தான் போருக்கு பயப்படக்கூடாது, ஏனென்றால் எதையும் விட மரியாதை முக்கியமானது….

Read More

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைத்து முன்னாள் முதல்வர்களும் தங்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு பங்களாக்களில் வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாக வசித்து வருகின்றனர். இவர்களில் குலாம் நபி ஆசாத் தவிர மற்ற அனைவரும், வாழ்நாள் முழுவதும் அதே வீட்டில் வசிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அரசு பங்களாக்களை கோடிக்கணக்கில் செலவழித்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர். ஓமர் அப்துல்லாவும், மெகபூபாவும்…

Read More