பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள், ஆண் துணை இல்லாமல் வெளிநாடு செல்ல சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான், பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சவுதியில் தியேட்டர், விண்வெளித் திட்டம் போன்றவை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்வதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 21 வயது நிறைவடைந்த எந்த ஒரு பெண்ணும், யாரின்…

Read More

ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது. 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது. புதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டிவந்தன. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவந்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா…

Read More

அமர்நாத் யாத்திரை: யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் உடனே திரும்பி செல்ல அரசு எச்சரிக்கை

அமர்நாத் யாத்திரை: யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் உடனே திரும்பி செல்ல அரசு எச்சரிக்கை

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது. ஸ்ரீநகரில் நிருபர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும், அந்த பகுதியில் பிடிபட்ட பயங்கரவாதியிடம், இலக்கை நோக்கி துல்லியமாக சுட உதவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், காஷ்மீர் உள்துறை செயலர் ஷலீன் காப்ரா பிறப்பித்த உத்தரவு: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகள் மற்றும்…

Read More