இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – மைத்திரிபால சிறிசேன

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவமானது, தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அத்தியாவசியம் என்பதனை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பிரதேசத்தினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு முகாம்கள் காணப்பட வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் வசம் காணப்படுகின்ற காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது…

Read More

பாகிஸ்தானில் அதிவேகமாகப் பரவி வரும் கொடிய எய்ட்ஸ் நோய் குறித்து அதிர்ச்சி

பாகிஸ்தானில் அதிவேகமாகப் பரவி வரும் கொடிய எய்ட்ஸ் நோய் குறித்து அதிர்ச்சி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாஹ்கோட் நகரில் எச்ஐவி அல்லது எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாகப் பரவி வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நகரில் ஒரே ஆண்டில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் 140 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சட்ட அமலாக்கத் துறை திரட்டிய தகவல்கள் பஞ்சாப் மாகாண அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 85 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆசியாவிலேயே எய்ட்ஸ் வேகமாகப் பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், 2017ல் மட்டும் அங்கு 20 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Read More

சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்

சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்

காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா? அலுவலகத்தில் பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் பதிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ., அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை இன்று (ஆக.,29) காலை வெளியிட்ட டுவீட்டில், அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா?இதுதான் சமூக செயல்பாடா?சமூக அமைதி சீர்குலைப்பா?சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே அறிவாலயம் அனுமதிக்குமா? அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும்,என்னையும்…

Read More

அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில்…

அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில்…

விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும் அவளும் உச்சி முகர்வாள். ஆனால் நான் பெற்ற பிள்ளை இன்று கோடானு கோடி தாய்மார்கள். ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டாடி கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னை பற்றி… நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என்…

Read More

அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்

அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்

அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார். ராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கும். காஷ்மீர் போராட்டத்திற்கான உறுதியான நேரம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு பாகிஸ்தான்…

Read More

ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் – பிலாவால் புட்டோ

ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் – பிலாவால் புட்டோ

ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அறிவுரை வழங்கி உள்ளன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது அணுஆயுத போர் தொடுக்க போவதாகவும், வான்வெளியை மூடப் போவதாகவும் பாக்., மிரட்டல் விடுத்து வருகிறது. அத்துடன் இந்தியா – பாக்., இடையேயான ரயில், பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும் இந்த பிரச்னையை கொண்டு சென்றது. காஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசின் இத்தகைய செயல்பாடுகளை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுடன், கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாக்., மக்கள் கட்சி (பிபிபி) தலைவர்…

Read More

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து. “இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார். இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில்…

Read More

அமேசான் தீ- ஜி 7 நாடுகளின் உதவி தேவையில்லை என பிரேசில் அறிவிப்பு

அமேசான் தீ- ஜி 7 நாடுகளின் உதவி தேவையில்லை என பிரேசில் அறிவிப்பு

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன. சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து பிரேசில் அதிபர் போல்சனாரோ காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவத்தை ஈடுபடுத்த உத்தரவிட்டார். இந்த முயற்சியில் 44,000 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதுடன், ஏழு மாநிலங்களில் தீயை அணைக்க ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதற்கு போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன….

Read More

1 ரூபாய்க்கு ‘சானிட்டரி நாப்கின்’

1 ரூபாய்க்கு ‘சானிட்டரி நாப்கின்’

பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, மலிவு விலை மருந்தகங்களில், 1 ரூபாய்க்கு, ‘சானிட்டரி நாப்கின்’கள் விற்பனை செய்ய, இந்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், மான்சுக் மாண்டவியா, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும், மத்திய அரசால், ‘ஜன் அவுஷாதி’ எனப்படும், மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருந்தகங்களில், மிக குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில்,…

Read More
1 2 3 6