மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு ஒன்று தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர், மாநில உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என, கோரியிருந்தார். அந்த மனு, உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா,…

Read More

ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பிணை மீதான கோரிக்கையும் அன்றைய தினத்தில் நீதவானினால் ஆராயப்படவுள்ளது. இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராக தண்டனை சட்ட கோவையில் வழக்கு தொடரப்பட்டுள்ள சட்ட சரத்துக்கள் தொடர்பான விளக்கத்தை சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே தெளிவூட்டினார். அப்போது, இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான சட்ட…

Read More

ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொது செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்த சாமிநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து , அவருக்கு பதிலாக கட்சி சட்டதிட்ட விதி18, 19 பிரிவுகளின் படி இளைஞர் அணிய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தின் மூலம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதியை பொறுத்தவரை அவர் முதலில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பொறுப்பேற்ற தகவல் அறிந்ததும்,சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக அறிவாலயத்தில் தொண்டர்கள் மேள, தாளம்…

Read More

இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி முகர்ஜிக்கு டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.305 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தருவதற்காக ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாடு முதலீடுகளை பெற்ற அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை கார்த்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது…

Read More

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ராகுல் இன்று முறைப்படி ஒப்படைத்தார். விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் ராகுல் தனது அறிவிப்பில் கூறி இருந்தார். ராகுல் ராஜினாமாவை அடுத்து கட்சியின் இடைக்கால தலைவராக மூத்த தலைவரான மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் 2 முறை ம.பி., முதல்வராக இருந்துள்ளார். உ.பி., கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார்.

Read More

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜூன் 30 ம் தேதியன்று இரவு டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள இந்து கோயில் மர்மநபர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்து கோயில் இடிப்பு, அதன் தொடர்ச்சியாக நடந்த மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து அமித்ஷா நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் டில்லி கமிஷனர். அவரிடம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் அமித்ஷா. அத்துடன் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்…

Read More

“செவன்” – விமர்சனம்

“செவன்” – விமர்சனம்

நடிகர்: ஹவிஷ் நடிகை: ரெஜினா டைரக்ஷன்: நிசார் சபி இசை : நிசார் சபி ஒளிப்பதிவு : சைத்தன் பரத்வாஜ் நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார் நந்திதாவின் கணவர் புகைப்படத்தை பார்த்த ரகுமானுக்கு அதிர்ச்சி. ஏற்கனவே அனிஷா அம்புரோஜும் ஹவிஷ் தனது கணவர் என்றும், காணாமல் போய்விட்டார் என்றும் புகார் அளித்து இருக்கிறார். இதுபோல் வாய்பேச முடியாத இன்னொரு பெண்ணும் ஹவிஷ் தனது கணவர் என்கிறார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உறுத்த ஹவிஷ் மீது பெண்களை ஏமாற்றி மோசடி…

Read More

இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது

இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.ஐ.டி அதிகாரிகள், பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை போலீஸ்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம்…

Read More

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மைதானம், சிறிய பவுண்டரி எல்லை என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார். கேதர் ஜாதவுக்குப் பதில் தமிழக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ்…

Read More
1 4 5 6