கவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா?

கவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா?

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்கினார். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக குமாரசாமி தொடர வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார். குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் நாளை கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் பாஜக…

Read More

றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கனடாவின் றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கனடா உதயன் “கிளிக்” செய்த ஹர்சிதாவின் அற்புதமான நடனத் தோற்றங்கள் பல. நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் குரு (மார்) கலைமன்றம் நுண்கலைக் கல்லூரி யின் ஸ்;தாபகர் ஶ்ரீமதி நிரஞ்;சனா சந்துரு மற்றும் அவரது புதல்வி செல்வி ஐஸ்வரியா சந்துரு ஆகியோர். அன்பான பெற்றோர் திரு சிவகரன் மற்றும் சர்மிளா ஆகியோர் அற்புதமான ஒரு அரங்கேற்றத்திற்கு வருகை தந்த ஒவ்வொருவரும் நன்றாக துயில் கொள்ளலாம். ஹர்சிதா சிவகரனுக்கு எமது வாழ்த்துக்கள்

Read More

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை தொடக்கம் நடைபெற்று மதியம் 11.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் ஆலயத்தின் சக சிவாச்சாரியப் பெருமக்கள் சகிதம் அனைத்து கிரியைகள் மற்றும் அபிசேகங்கள் அனைத்தையும் மி;கவும் நேர்த்தியாகவும் வேதாகம விதிப்படியும் ஆற்றினார்கள். கொடியேற்றத்தின் உபயகாரர்கள் திரு ரூபன் அரியரத்தினம் தனது துணைவியார் மற்றும் தனது பெற்றோர் சகிதம் அங்கு சமூகமளித்திருந்தார். மற்றும் தேர் உற்சவ உபயகாரர் வர்த்த்கப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் வர்த்தகப் பிரமுகர் திரு கேதா நடராஜா போன்றவர்கள் உட்பட பல…

Read More

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில், இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு, நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நிலவின் தென்துருவ பகுதியில், கனிம வளங்கள், தண்ணீர் இருப்பு உள்ளதா, மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ‘சந்திரயான் — 2’ என்ற, விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ உருவாக்கியது. அந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘சதீஸ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது….

Read More

லாஸ்லியா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை பெண்

லாஸ்லியா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை பெண்

சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. லாஸ்லியா என்று இவரை தமிழக ரசிகர்கள் அழைத்து வந்தாலும், இவரது பெயர் லொஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென “லாஸ்லியா ஆர்மி” என்ற இணைய பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி லொஸ்லியா மரியநேசன் பிறந்தார். கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழ்நிலை…

Read More

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது

பாகிஸ்தானில் நவாஸ் செரீப் பிரதமராக இருந்த போது பனாமா ஆவண கசிவு காரணமாக பதவியை இழந்தார். இதனையடுத்து பிரதமரானவர் சாகித் ககான் அப்பாசி. பின்னர் தேர்தல் நடைபெற்று இம்ரான் கான் பிரதமர் ஆனார். அப்பாசி பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு நவாஸ் செரீப் அமைச்சரவையில் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தார். அப்போது, கத்தார் நாட்டில் இருந்து திரவ எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அப்பாசி மறுத்து வந்தார். இந்த நிலையில் அப்பாசி லாகூரில் பத்திரிகையாளர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தேசிய பொறுப்புடைமை முகமை (ஊழல் தடுப்பு) அதிகாரிகள் வழிமறித்து கைது செய்தனர். இதற்கு பாகிஸ்தான்…

Read More
1 2 3 4 5 6