நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா?

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா?

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேசுவரியின் கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேசுவரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து…

Read More

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

இஸ்லாமாபாத்:’சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு வழங்கப்படும்’ என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன், குல்பூஷன் ஜாதவ், , பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. அதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், 17ல், தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாக்., மறு பரிசீலனை செய்ய வேண்டும்; இந்திய துாதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத்…

Read More

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல் பயணித்து இருப்பது சீனக்கடல் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் சீனக்கடலில், சீனா தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி வருகிறது. சமீபமாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு சுய அதிகாரம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது. தைவானுக்கு சுதந்திரம் அளிப்பது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் சீனா கூறி உள்ளது. தங்களிடம் இருந்து தைவானைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் படைபலத்தை பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம் என்று கடந்த புதன்கிழமை (ஜூலை 24) அன்று சீனா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் சீனா – தைவானைப் பிரிக்கும்…

Read More

நீதிபதிகளை சந்திக்க ஐ.நா.,வுக்கு இலங்கை பார்லிமென்ட் தடை

நீதிபதிகளை சந்திக்க ஐ.நா.,வுக்கு இலங்கை பார்லிமென்ட் தடை

இலங்கை நீதிபதிகளுடன் ஐ.நா., மனித உரிமை வல்லுனர்கள் ஆலோசிப்பதற்கு, அந்நாட்டு பார்லிமென்ட் தடை விதித்துள்ளது.அண்டை நாடான இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் உடனான போர், 2009ல் முடிவுக்கு வந்தது. போர்க்குற்றங்கள் குறித்த வழக்குகள் இலங்கை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பிரிவு துாதர் கிளமென்ட் வோல், தெற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இலங்கையின் மூத்த நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தவும், கிளமென்ட் தலைமையிலான, மனித உரிமை பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை பார்லிமென்டில், நேற்றுமுன்தினம் பேசிய, எதிர்க்கட்சி தலைவர், மகிந்த ராஜபக்சே, ”இலங்கை நீதிபதிகளுடன் ஐ.நா., மனித உரிமை பிரிவு…

Read More

மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள், புதிதாக மோசடி சர்ச்சையில் சிக்கி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி. தோனியும் அவரது மனைவி சாக்ஷியும், தங்களின் நிறுவனங்களில் போலி ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.தோனி மனைவி சாக்ஷி நடத்தும் அம்ராபாலி மகி (மகி என்பது தோனிக்கு ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர்) நிறுவனம் போலி ஒப்பந்தங்கள் தயாரித்து, வீடு கட்டி தருவதாக மக்கள் பணத்தை ஏமாற்றியதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒப்பந்தங்களின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்ய 2 ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது….

Read More

இஸ்ரோவின் மூன்றாண்டு வருமானம் ரூ. 6 ஆயிரம் கோடி

இஸ்ரோவின் மூன்றாண்டு வருமானம் ரூ. 6 ஆயிரம் கோடி

கடந்த மூன்று ஆண்டுகளில் வணிக ரீதியாக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் இஸ்ரோ 6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது குறித்து அமைச்சர் ஜிதேந்திரசிங் பார்லியில் கூறியதாவது: இஸ்ரோவின் துணை அமைப்பான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் செயற்கை கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 239 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரோவின் வருவாய் சுமார் 6 ஆயிரத்து 289.05 கோடி ரூபாயாக உள்ளது. நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(என்.எஸ்.ஐ.எல் ) என்பது இந்திய விண்வெளி திட்டத்தில் அதிகரித்து வரும் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கும்,…

Read More

இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார்? என்பதை தீர்மானிப்பதாக இருந்தன . போரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்பட்டது…

Read More

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். “எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்” என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம்…

Read More
1 2 3 4 6