எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது. கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது. இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என உள்ளூர் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. “இங்கிலாந்து நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும், ஒருவகையான கொள்ளையாகும்” என ஈரான் கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார…

Read More

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்கிறார். பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தேவையற்ற செலவினங்களை அவர் குறைத்து வரும் நிலையில், அமெரிக்க பயணத்தின் போதும் ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை என திட்டமிட்டுள்ளார். மாறாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே 3 நாட்கள் தங்குவதற்கு இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.

Read More

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு ஒன்று தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர், மாநில உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என, கோரியிருந்தார். அந்த மனு, உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா,…

Read More