முல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு

முல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை எழுதப்பட்டது. வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம் அதிபர் டிரம்ப் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார். ரஷ்யத் தலையீட்டில் டிரம்ப்க்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் அவையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின்…

Read More

வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதற்காக தூத்துக்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த 16-ந்தேதி, உள்ளூர் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஒரு ஜனநாயக படுகொலை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதைப்போல பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை என தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது வெறும் ஒரு சரிபார்த்தல்…

Read More

லோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது

லோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது

சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒடிஷா முதல்வராக பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை சரியில்லை.2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு, ஒடிஷாவில் பா.ஜ.,வை வளர்க்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அம்மாநிலத்தில காங்., வீழ்ச்சி அடைந்த பிறகு பா.ஜ.,வுக்கும் பி.ஜ.த.,க்கும் இடையே போட்டி நிலவுகிறது. அங்கு 21 லோக்சபா தொகுதிகள், 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 19 தொகுதிகளில் பா.ஜ.,வும் பி.ஜ.த.,வும் நேரடியாக மோதுகின்றன. சட்டசபை தேர்தலி்ல் நிலைமை கொஞ்சம் வேறுபடுகிறது. பி.ஜ.த., எம்.பி., ததகத் சத்பதி கூறும்போது, ‛‛லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக வெற்றிகளை…

Read More