பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயம்

பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயம்

கதீட்ரலில் “பெரும் சேதங்கள்” ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்புறம் உள்ள மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன. ஆனால் 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள் என்ன? இந்தக் கதீட்ரலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோஸ் சாளரங்கள் மூன்று இருந்தன. மிகவும் புகழ்மிக்க அம்சங்களில் ஒன்றாக அவை இருந்தன. மேற்குப் பகுதியில் இருந்த முதலாவதும், சிறியதுமான சாளரம் 1,225 வாக்கில்…

Read More

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்டது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்டது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற்கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து தேர்தல் அத்தொகுதியில் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது என தகவல் வெளியாகியது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரையை தேர்தல் ஆணையம் 14-ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான…

Read More

கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை

கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்திவருகிறது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் இந்த தொகுதியில் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளை அமமுக கட்சியைச் சேர்ந்த சிலர் சிறைப்பிடித்தநிலையில் போலீசார் வான் நோக்கிச் ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தனர். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து, மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

Read More